*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹286
₹400
28% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்க ளின் உலகம் இதுவரை பதிவானதில்லை. பூனைக்கதை அதைச் செய்கிறது. திரைப்படம் - தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல். இந்தக் கதையை ஒரு பூனை சொல்கிறது. அது இன்று வாழும் பூனையல்ல. என்றும் வாழும் பூனை. மாய யதார்த்த எழுத்தின் வசீகர சாத்தியங்களை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் இந்நாவல் விவரிக்கும் கலையுலகம் அசலானது. அரிதாரங்கள் அற்றது. இருண்மையின் அடியாழங்களில் பூனையின் கண் பாய்ச்சும் வெளிச்சம் உக்கிரமானது. மதிப்பீடுகளின் தடமாற்றத்துக்கு எதிராக யுத்தத்துக்கு நிற்கும் பூனை ஒரு கட்டத்தில் நீங்களாகத் தெரிவீர்கள். ஆனால் அது நீங்களல்ல. நீங்கள் மட்டுமல்ல.