கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஈழ (புலம்பெயர்) எழுத்துகளையும் அதற்கப்பால் மலேசிய சிங்கப்பூர் கலை இலக்கிய வெளிப்பாடுகளையும கரிசனையோடு கவனித்து எழுதி வருகிறார். அதற்கு முன்பே அவருக்கு ஈழ அரசியலைப் பற்றிய ஈழப்போராட்டத்தைப் பற்றிய அவதானமிருந்திருக்கிறது. இதனால் ஈழ அரசியலையும் அதன் வரலாற்றுப் போக்கையும் இலங்கை நிலவரத்தையும் ஆழமாகப் புரிந்தும் வைத்திருக்கிறார். கூடவே ஈழ நிலப்பரப்பில் தொடர்ச்சியாகப் பயணங்களைச் செய்திருக்கிறார். மட்டுமல்ல ஈழ அரசியலும் ஈழ அரசியலின் நிமித்தமாகப் புலம்பெயர்ந்தவர்கள் வாழ்கின்ற நாடுகளிலும் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த மக்களின் வாழ்க்கையை அவதானித்து வருகிறார். இவற்றினடியாகவே அவர் உலகத் தமிழிலக்கிய வரைபடத்தைப் பற்றிச் சிந்திக்கிறார். ஆறாந்திணையாக சேரன் உணர்ந்ததை விரித்து இந்த உலகத் தமிழிலக்கிய வரைபடச் சிந்தனையை அ.ரா முன்வைக்கிறார். இந்த நூலில் இந்தப் பார்வையின் அடிப்படையில் சமகால ஈழ இலக்கியத்தை ஆழ்ந்து நோக்கும் 33 கட்டுரைகள் உள்ளன. ஈழப்போரின் முடிவுக்குப் பிறகு அந்த அனுபவங்களோடும் அதற்கு முன்னான காலச் சித்திரிப்புகளோடும் எழுதப்பட்ட இலக்கியப் பிரதிகளைப் பற்றிய விமர்சனங்களும் பார்வைகளும் இவை. இந்த விமர்சனங்கள் தனியே பிரதியை மட்டும் நோக்காமல் அவை எழுதப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்டுள்ள அல்லது மையம்கொண்டுள்ள வரலாற்றுப் பின்னணியையும் அதனுடைய உளவியற் கூறுகளையும் விரிந்த தளத்தில் சேர்த்துப் பார்க்கின்றன. இந்தப் பார்வை தவிர்க்க முடியாதது. - கவி.கருணாகரன் கிளிநொச்சி
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.