About The Book

எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது? இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள். ஜின்னா ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா? தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்? சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் ஒரு டிரங்குப் பெட்டியில் தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில் தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே. க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.?இந்த வழக்குகளை வழக்கறிஞர் குக. சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில்?நமக்கு அறிமுகம் செய்கிறார்.+ஆட்டோ சங்கர் பூலான் தேவி அஜ்மல் கசாப் வீரப்பன் நொய்டா படுகொலை போன்ற ஒட்டுமொத்த இந்தியாவையும் பதைபதைக்க வைத்த கொடூரமான கொலை வழக்குகள் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.நினைத்துப்பார்க்கவே அஞ்சும் கொலைபாதகக் குற்றங்களை இவர்களில் சிலர் மிக இயல்பாகச் செய்திருக்கிறார்கள். சிலர் பணத்துக்காகவும் சிலர் புகழுக்காகவும் சிலர் இன்னதென்றே கண்டுபிடிக்க முடியாத காரணங்களுக்காகவும் கொன்றிருக்கிறார்கள்.ஒவ்வொரு வழக்கும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியின் பின்னணி என்ன? எது அவரைக் குற்றச்செயல்களைச் செய்யத் தூண்டியது? எப்படிப்பட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டார்? அவருடைய வாழ்க்கைமுறை பின்னணி என்ன? அவர் பிடிபட்டது எப்படி? பிறகு என்ன ஆனது? கிரிமினல்களைத் தண்டிப்பதன்மூலம் மட்டும் நீதி கிடைத்துவிடுமா? இவர்கள் உருவாகக் காரணமாக இருந்த சமூக அரசியல் சூழலை எப்படிச் சீர்திருத்துவது?இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மிகப் பரந்த அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. அன்றைய பத்திரிகைகளில் சுடச்சுட அலசப்பட்டவை. பொதுவெளியில் அச்சத்துடன் விவாதிக்கப்பட்டவை. நூலாசிரியர் வைதேகி பாலாஜியின் இந்தப் புத்தகம் அந்தக் காலகட்டத்தையும் அப்போதைய பரபரப்பையும் நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE