நிறைய காதல் கவிதைகள் பேசப்படும் இந்த கால கட்டத்தில் மனுஷர்களின் உணர்வுகளை பற்றி பேசும் புத்தகம் தான் இது. பெரும்பாலானவை தனிமை பற்றியே எழுதப்பட்டிருக்கும் அதற்கான காரணமென்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை அந்த நேரத்தில் எனக்கான தேவை எதுவோ அதுவாகவே என் தனிமை எனக்கு மாறியிருக்கும். தனிமை என்பதே பல பிம்பங்களை தன்னுள் கொண்டது தானே அதில் சிலவற்றின் பிரதிபலிப்பை இதில் நீங்கள் பார்க்கலாம். பிறரின் வலிகளை என்னுள் நிறைத்து பார்ப்பதாலோ என்னவோ என்னை சுற்றிய எழுத்து நடையாகவே பல கவிதைகள் இருக்கும். ஆனால் அது நான் அல்ல என்னை சுற்றி நிகழும் சம்பவங்களின் எதிரொலியாகவோ அல்லது நான் காணும் ஏதோ ஒரு காட்சியின் பின்புலமாகவோ இருக்கலாம் இன்னும் சில நான் பார்த்து பேசிய நபர்களின் கண்ணின் தெரிந்த வலி அல்லது அவர்களின் புன்னகை சிந்திய இதழ்களின் அடியில் மடிக்கப்பட்ட நாவினால் மறைக்கப்படும் கண்ணீரின் கதைகளாகவும் இருக்கும்.