Raja Thandhiram
shared
This Book is Out of Stock!
Tamil

About The Book

இந்தியாவில் அன்றைய அரசியல் சமூக சூழலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அரசர்களுக்கான ராஜதந்திர நூல் அர்த்த சாஸ்திரம். அர்த்த சாஸ்திரம் போலவே இத்தாலிய மொழியில் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராஜதந்திர நூல் ‘இல் பிரின்ஸிப்’. அதை எழுதியவர் நிக்கோலோ மாக்கியவெல்லி. ஆங்கிலத்தில் ‘பிரின்ஸ்’ என்று மொழி பெயர்க்கப்பட்ட அந்தப் புத்தகத்தைத் ‘துளசி’ என்கிற அம்மையார் 1946இல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்தப் புத்தகத்துக்கு அன்றைய தினமணி ஆசிரியர் ஏ. என். சிவராமன் பதிப்புரை வழங்கி இருக்கிறார். அர்த்த சாஸ்திரம் போன்று விரிவான போர் முறைகள் நிர்வாக உத்திகளை மாக்கியவெல்லியின் ‘பிரின்ஸ்’ எடுத்தியம்பவில்லை. சின்னாபின்னமாகிக் கிடந்த அன்றைய இத்தாலியில் நிலையான ஆட்சி ஏற்படவும் சிற்றரசர்களுக்கிடையே நிலவிய பகையைப் பயன்படுத்தி அந்நியர்கள் ஆட்சி அதிகாரம் செய்வதைத் தடுப்பதுவும்தான் மாக்கியவெல்லியின் இலக்காக இருந்தது; அதற்காக எழுதப்பட்ட நூல்தான் ‘பிரின்ஸ்’. உள்நாட்டு நிர்வாகத்தை அர்த்த சாஸ்திரம் முன்னிலைப்படுத்துகிறது என்றால் வெளியுறவுக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தருகிறது ‘பிரின்ஸ்’. ராஜ தந்திரம் என்கிற தலைப்பில் துளசி அம்மையார் மொழியாக்கம் செய்திருக்கும் மாக்கியவெல்லியின் ‘பிரின்ஸ்’ 75 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பாக வெளி வந்திருக்கிறது. - ‘கலா ரஸிகன்’ தினமணி 17-07-2022
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
144
190
24% OFF
Paperback
Out Of Stock
All inclusive*
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE