*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹275
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது.நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் கிடையாதுதான். இருந்தாலும் எமர்ஜென்சி முதல் எம்.ஜி.ஆர் வரை; அசாம் முதல் ஆசிய விளையாட்டு வரை; போபால் முதல் பஞ்சாப் விவகாரம் வரை; அயோத்தி முதல் அமிதாப் பச்சன் வரை; பிரணாப் முகர்ஜி முதல் போஃபர்ஸ் வரை; சார்க் முதல் ஷாபானு வரை; வி.பி.சிங் முதல் விடுதலைப்புலிகள் வரை; கம்ப்யூட்டர் முதல் கட்சித்தாவல் தடைச்சட்டம் வரை; ஜெயவர்த்தனே முதல் ஜெயலலிதா வரை அவர் அரசியல் வாழ்வின் அத்தியாயங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் படர்ந்தும் விரிந்தும் உள்ளன.இந்தியாவை அவர் முன்னால் நகர்த்திச் öன்றிருக்கிறார்; பின்னுக்கும் இழுத்து வந்திருக்கிறார். அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமின்றி தோல்விகளிலிருந்தும் தடுமாற்றங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது. ராஜீவ் காந்தியின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்நூல் அன்றைய இந்தியாவின் நிழல் எவ்வளவு அழுத்தமாக இன்றைய இந்தியாவின்மீது படிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ‘திராவிட இயக்க வரலாறு’ ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதிய ஆர். முத்துக்குமாரின் விரிவான விறுவிறுப்பான படைப்பு.