*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹90
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
‘சபால்டர்ன் ஆய்வுகள்’ (Subaltern Studies) என அறியப்படும் கருத்தாக்கத்தை முன்வைத்த ரணஜித் குஹா தனது நூறாவது வயதை நெருங்கிய நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்தார். சாதி, மதம், வகுப்பு, தீண்டாமை, இனக்குழு (Tribe) முதலான அடிப்படைகளில் ஒரு சாராரை, ஏதோ ஒரு வகையில் வேறுபட்டவர்களாகவும், ஒப்பீட்டளவில் கீழ்நிலையில் இருப்பவர்களாகவும் அணுகும் போக்குதான் ‘சபால்டர்ன் அணுகல்முறை’ அல்லது ‘விளிம்புநிலை ஆய்வுகள்’ எனப்படுகிறது. இதனூடாக இம்மக்களின் வாழ்க்கை அமைவு, தம் மீது சுமத்தப்பட்ட இந்த ‘சபால்டர்ன்’ எனும் அடையாளத்தை அவர்கள் எதிர்கொண்டமை ஆகியவை குறித்த ஆய்வாகவே சபால்டர்ன் ஆய்வுகள் அணுகப்பட்டன. பெரிய அளவில் ஒரு விவசாயச் சமூகமாக உருப்பெற்றிருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியம் மற்றும் அதற்குப் பிந்திய காலங்களில், இந்தப் பிரச்சினையை சபால்டர்ன் மக்கள் எதிர்கொண்ட தன்மைகள், வடிவங்கள் ஆகியன கவனத்துக்குரியவை ஆயின. இதை ஒட்டி வரலாற்றை மேலிருந்தே பார்க்கும் அணுகல்முறையைச் சற்றே பின்னுக்குத் தள்ளி கீழிருந்து எழுதப்பட்ட வரலாறு (History From Below) என்கிற கருத்தாக்கமும் இதன் ஊடாக முன்வைக்கப்பட்டது.