நிஜத்திற்கும் நினைவிற்கும் நடுவில் ஒரு நெஞ்சம்! இந்தப் புத்தகம் நினைவுகளின் உறைவிடம். இதனுள் உள்ள கவிதைகள் வாசிப்பவர்களின் புதைந்துபோன பழைய நினைவுகளை வெளிக்கொணர்வதாகவும் புதிய அனுபவத்தைக் காட்டுவதாகவும் இருக்கும். நிகழாக் கற்பனைகளும் நிகழ்கால எதார்த்தமும் இந்தக் கவிதைகளுக்கு அழகு சேர்க்கின்றன. ஒரு பூவின் மகரந்தத்தைச் சுமந்து மற்றொரு பூவிடம் சேர்க்கும் அந்த வண்டைப் போல் தான் இந்தக் கவிதைகளும் என் உணர்வுகளை உங்களுக்குள் கிடத்துகிறது. ஒரு சாலையோர இருக்கையில் அமர்ந்து இந்தச் சாலையோர இருக்கைகளைப் படித்துப் பாருங்கள் மனம் சற்றே மௌனம் கொள்ளும்!