பாரதிதாசன் அவர்கள் படைத்த 'இன்பக்கடல்' 'சத்திமுத்தப் புலவர்' ஆகிய இரண்டு சிறு நாடகங்கள் 27-10-1950-இல் புதுச்சேரி பாரதிதாசன் பதிப்பகம் வழி வெளியானது.

பின் இந்நாடகத்தைப் பாரிநிலையம் 59-பிராட்வே சென்னை-1 வெளியிட்டது.

முதற்பதிப்பு: மார்ச் 1965; மூன்றாம் பதிப்பு: மே 1974. இதனை வெளியிட்டோர் பாரிநிலையம் சென்னை.

இந்த நாடகம் ஓர் அரிய சொல்லோவியம்! இயல்பான எதுகை மோனைகளின் நடனசாலை! புரட்சிப் பாவலரின் கற்பனை மாளிகை! தமிழின் சுவைக்குச் சுவைகூட்டும் நாடக அமுதம்! ஒரு நாடகத்தை இப்படியும் படைக்க முடியும் என்பதனை உலகுக்கு உணர்த்தும் முதல் காவியப் படைப்பு! வேறென்ன சொல்ல? படியுங்கள் படித்துச் சுவைத்து மகிழுங்கள்!

தமிழர் மேன்மையைக் காட்டும் கருத்துக்கள் பல உருவங்களில் தோன்றித் தோன்றி நினைவைக் கவர்வதுண்டு! சும்மா இருந்துவிட முடிகின்றதா!

அவ்வப்போது எழுதிக் கிடைத்த ஏட்டில் வெளியிட்டு வைத்தவைகளே இந்த நாடகங்கள்.

இப்போது நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது அந்த நாடகங்கட்கு. பாரிநிலையத்தார் இவற்றை நல்ல முறையில் ஒன்று சேர்த்து அச்சிட்டு வெளியிட இசைந்தார்கள் இல்லையா?

பாரி நிலையத்தார்க்கு என் நன்றி! தமிழர்கள் ஆதரிக்க. இஃது என் விண்ணப்பம்.

Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.