நான் விரும்புவதும் இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும் ஏங்கியதும் என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும் கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும் மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே இந்த லட்சியத்தை அடையவேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன். நடமாடுகிறேன். நான் இருப்பதும் அதற்காகவேதான் நான் பேசுவன எழுதுவன ராஜீயத் துறையில் முயற்சி செய்வன ஆகிய யாவும் இக் குறிக்கோளைக் கொண்டவையே ஆனால் ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும் என்பதை நெடுகிலும் நம்பி வந்திருக்கிறேனாகையால் என்னுடைய சோதனைகளை ஒளிவு மறைவாகச் செய்யாமல் பகிரங்கமாகவே செய்து வந்திருக்கிறேன். - மகாத்மா காந்தி.