*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹127
₹136
6% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
‘சுபா’ - புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். சிறுகதைகள் குறுநாவல்கள் தொடர்கள் நாவல்கள் திரைக்கதைகள் என்று சுபாவின் எழுத்துப் பயணத்தில் அனைத்துப் படைப்புகளும் அருமையானவை. தன் அசிஸ்டெண்ட் முருகேசனின் விருப்பத்துக்காக மகாபலிபுரம் சுற்றுலாப் போகிறான் செல்வா. மகாபலிபுரத்தில் காற்று வாங்குபவர்கள் திரும்புகையில் ஆபத்தை வாங்கி வருகிறார்கள். கடத்தல் குற்றத்துடன் ஒரு கொலைப் பழியும் செல்வாவின் மீது விழுகிறது. பிறகென்ன நடக்கும்..? வழக்கம் போல் சர்தார்ஜி வேடமணிந்து செல்வா முருகேசனின் துணைகொண்டு துப்பறியத் தொடங்குகிறான். இந்தக் கதையில் சாகசங்களின் பங்கு குறைவாகவும் நகைச்சுவையின் பங்கு தூக்கலாகவும் இருப்பது செல்வா சீரிஸில் சற்று மாறுதலானது. அதனாலேயே கூடுதலாக ரசிக்கவும் வைக்கிறது ‘செல்வாவைச் சீண்டாதே’ என்கிற முதல் புதினம். இரண்டு பாகங்களாக விரிகிற இரண்டாவது புதினம் ‘முடிவு என் கையில்’. விபத்தாகக் காட்டப்படும் ஒரு கொலை என்கிற துவக்கமே ஜெட் வேகம். அதை நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் உருவாக்குகிற சாட்சிகள் ஆகியவற்றுடன் போலீஸ் முன்னேற கொலை செய்தவன் அவற்றை முறியடிக்கிறான். நீதி வெல்லும் என்பதை விவரிக்கிற இரண்டாம் பாகத்தில்தான் எத்தனை அடுக்கடுக்கான திருப்பங்கள்! பரபரவென நகரும் சம்பவங்கள் ‘இப்படிக்கூட நடக்குமா?’ என்ற வினாவை மனதில் எழ வைத்து புருவங்களை உயர வைக்கிறது. சற்றும் எதிர்பாராத ஒன்று முடிவுத் திருப்பம்! ரோலர் கோஸ்டரில் பயணித்து இறங்கியதைப் போன்ற அனுபவம் படித்து முடிக்கையில். சுபாவின் புதின வரிசைகளில் இது பதினொன்றாம் புத்தகம்.