நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்! சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார். மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ கட்டை வண்டியோஅவ்வளவு ஏன் ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது. அடர்ந்த காடுகள். நாவல் மரம் பலா மரம்நெல்லி மரம்... ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள். வகைவகையான மூலிகைச் செடிகொடிகள்.சித்தர்கள் வசித்த குகைகள்.ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள்.இன்னும் எத்தனையெத்தனையோஅற்புதங்கள்! இயற்கை ஒளித்துவைத்திருக்கும் கானக அழகைத் தேடி தேடிக் காண்பதே மனத்துக்கு சுகம்தான். அதைக் கண்முன் நிறுத்துகிறது இந்நூல். படித்து முடித்ததுமே நீங்கள் சதுரகிரி போகத்திட்டமிடுவது நிச்சயம்!+யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! இந்த உயர்ந்த நோக்கோடு உருவானதே திருமந்திரம். வேதாந்தம் - சித்தாந்தம் சித்தி - முக்தி யாகம் - யோகம் அறிந்துகொள்ள வேண்டியவை ஆயிரம் விஷயங்கள்! கனம்மிகுந்த காரணத்தால் புரியாத விஷயங்களையெல்லாம் உப்பு புளி மிளகாய் சமாசாரங்களாக எளிமைப்படுத்தியது திருமந்திரம். தேசிய நெடுஞ்சாலையில் 'சுமோ'வில் போவதுபோல சுகமான நடையில் நூலாசிரியர் இர.வாசுதேவன் நம்மை அழைத்துச்செல்கிறார். சென்னை ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் இவர் உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள்மீது காதல் கொண்டவர். திருமந்திரம் - திருமூலர் சொற்பொழிவு ஆற்றியவர்: டாக்டர் இர. வாசுதேவன் ஆன்மிக ஆல்ரவுன்டர்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.