பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி. 1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் (15,000 பிரதிகள்) கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். கனவுகளுக்கும் கசப்பான உண்மைகளுக்கும் நடுவே, மாயத்தோற்றங்களுக்கும் மறுக்கவியலா எதார்த்தத்திற்கும் நடுவே நாவல் கட்டவிழ்கிறது. கென்யாவின் அரசியல் – பொருளாதார – பண்பாட்டு விடுதலையைக் கோரும் உணர்ச்சிமயமான குரலை மரபுவழி கதைசொல்லும் பாணியும் பிரெக்ட், புன்யான், ஸ்விப்ட், பெக்கெட் போன்றோரின் புதிய பாணியும் இரண்டறக் கலந்த மொழியில் கூகி இந்நாவலைப் படைத்துள்ளார்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.