கலைஞர் கருணாநிதியின் உள்ளம் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் ஓர் சிந்தனை ஆழி; ஆம் தொலைவில் தூங்கும் அழியாத லட்சிய முகடுகளை நோக்கி சுழன்று சீறும் எதிர்ப்புச் சூறாவளிக்கு அஞ்சாது வானம் முட்டப் பரந்து கிடக்கும் வர லாற்றுப் பரப்பிலே சொக்கி வாழ்வின் கரையோ ரத்திலே உற்சாக கீத மிசைக்கும் ஒய்யாரக் கடல் தான்.

அந்த அழகுக் கடலில் குவிந்த முத்துக்களை தமிழகத்தின் கலைக் கூடத்திலே திரட்டித்தரும் பணி எமக்குக் கிடைத்தது குறித்து பெருமகிழ்வு கொள்கிறோம்.

சாதாரணப் பிரஜை! அந்தப் பிரஜையின் ரத்த வியர்வை தான் பிரபுக்களின் மாளிகை பிரபுக்களின்

மகிழ்ச்சிபிரபுக்களின் வாழ்வு

காட்டில் திரியும் மிருகங்களுக்குக்கூட சந்தோஷ முண்டே! ஜோடிப் புறாக்கள்-ஓடி விளையாடும் மான்கள் பாடிப்பறக்கும் குயில்கள்-அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்!

சுதந்திர பூமி தான். ஆனால் இங்கே தான் பிணமலைகள்! பிள்ளைச் சந்தைகள்! தற்கொலைகள்! தான்தோன்றித் தர்பார்கள்.

வறுமை திருட்டு வஞ்சகம் விபசாரம்! எங்கே? வற்றாத ஜீவநதிகள் வளைந்தோடும் நாட்டிலே-வளமான சோலை

கள் பூத்துக்குலுங்கும் பூமியிலே.

வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்.'தாழ்ந்த உள்ளங்கள்.

அப்பொழுதெல்லாம் சொந்தம் பாராட்டி ஆதரிப்ப தில்லை அரசாங்கம். 'அநீதியிடையே வாழவேண்டாம் இறப் புலகில் இன்பம் காண்போம்'என்று சாவதற்குச்சென்றால் சட்டம் என்ற கையை நீட்டி சொந்தம் என்ற சூழ்ச்சி மொழி பேசுகிறது அரசாங்கம். அதிசயமான அரசாங்கம்! அற்புதமான நீதி!