பகத்சிங்கின் சிறைவாழ்க்கை தமிழில் தோழர் சி.ஏ.பாலனின் ‘தூக்கு மர நிழலில்’ போன்ற நூல்களைப் படித்தவரகளுக்கு சிறைக் கொடுமைகள் பற்றி நன்கு அறிய முடியும். ஆனால் இது நிறைந்த மனிதாபிமானம் கொண்ட ஒரு சிறை அதிகாரியின் டைரிக் குறிப்புகளாக மொத்தமாய்ப் பார்த்தால் சிறைக் கைதிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நாவலைப்போல் விர¤கிறது. மதுரைச் சிறையில் ‘அரசமரம்’‘மாமரம்’ குவாரண்டின்களில் நானும் பல மாதங்கள் அரசியல் கைதியாக இருந்தேன். அங்கு நிகழ்ந்த கலைஞர்களின் ஆடல் பாடல்களை மதுரை நம்பி அழகுற பதிவு செய்துள்ளார்.. எஸ்.ஏ.பெருமாள். தோழர் மதுரை நம்பியின் இந்நூல் சுயசரிதைத் தன்மை கொண்ட ஒரு வரலாற்று ஆவணமாக நம் கைகளில் கிடைத்துள்ளது. ஒரு நாவலுக்குண்டான உணர்ச்சி வேகமும் காலத்தொடர்ச்சியும் சமூக ஆய்வும் கலந்து ஒரு முழுமையான வாழ்க்கைத் தரிசனத்தை இந்நூல் தருகிறது. 80களில் சிறைக் காவலராகப் பணியேற்று 2020 வரையான நாற்பது ஆண்டு காலத்தில் அவர் சிறைக்குள் சந்தித்த மனிதர்கள் பலருடைய சுருக்கமான வாழ்க்கையை அறியும்போது பல நாவல்களைப் படித்த உணர்வு கிடைக்கிறது.. ச.தமிழ்ச்செல்வன்
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.