*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
About The Book
Description
Author
கலைஞர் கருணாநிதி அவர்கள் கிரேஸி மோகனை வைத்து கலைஞர் தொலைக்காட்சிக்காக ஒரு தொடர் செய்ய விரும்பிய போது அவரை அழைத்து ‘உன் பழைய நாடகங்கள் வேண்டாம். கலைஞர் தொலைக்காட்சிக்காக புதிதாக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கொண்டு வா’ என்று கேட்க அதற்காக கிரேஸி மோகன் எழுதிய ஒரு நகைச்சுவை தொடர்தான் ‘சிரி.. சிரி.. கிரேஸி’ என்ற நாடகம். அத்தொடர் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னுரையுடன் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது. சிரி சிரி Crazy மாதுவின் குடும்பத்தில் நடக்கும் ஹாஸ்யமான சம்பவங்களை வைத்துக் கோர்த்த சிரிப்புச் சரவெடி எனலாம். பேசக் கற்றுக்கொள்ளும் குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் இடைவிடாது இடை வலிக்கும் வரை சிரிக்க வைக்கும் 15 குறுங்கதைகளை கொண்ட இந்தத் தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் 15 வாரங்களுக்கு ஒளிபரப்பானது. இத்தொடரின் முத்தாய்ப்பாக ஒவ்வொரு கதையின் இறுதியில் வரும் மோகன் எழுதிய 2 அடி குறள்களைக் கூறலாம். திருவள்ளுவர் போல் ஒரு சிறு–வள்ளுவராய் நமக்கு மிளிர்கிறார் கிரேஸி மோகன்.