தற்கால வாசகருக்கு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள மிகப் பெரிய நூலான சிவ புராணம் போன்ற ஒன்றைப் படித்து புரிந்து கொள்ள அவகாசமோ பயிற்சியோ இராது என்பதால் இச்சிறு நூலில் சுருக்கமாகவும் எளிதில் படிக்கும் நடையிலும் அப்புராணத்தின் ஒரு சில முக்கிய கருத்துக்கள் மட்டும் கதை வடிவாகத் தரப்பட்டுள்ளன. இந்த அதிவேக நவீன யுகத்தில் மிகக் குறைவான நேரத்தில் படிக்கும் படியாக உள்ள இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளை வீட்டில் பெரியவர்கள் படித்து இள வயதிலேயே அவரவர் குழந்தைகள் பேரன் பேத்தியர்களுக்குச் சொன்னால் நம் பாரதக் கலாச்சாரத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வு செம்மைப் படும். மகரிஷிகளின் ஞானத்தைப் பன்னெடுங்காலமாக இப்படி பெரியோர் சொல்ல இளையோர் கேட்டு தொடர் சங்கிலியாக அடுத்தடுத்த சந்ததியருக்குக் கொண்டு சென்றனர். இம்மகத்தான புராணங்களை நாமும் நம் சந்ததியரிடம் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை.உங்களுக்குத் தெரியுமா?கீழ்க்காணும் கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியாவிட்டால் இந்தப் புத்தகம் மூலம் அறியலாம்.1. ஏன் நாம் சிவனை லிங்க வடிவில் வழிபடுகிறோம்?2. ஏன் சிவனை வழிபடுமுன் கீர்த்திமுகனை வழிபடுகிறோம்?3. ஏன் சிவன் அர்த்தநாரீஸ்வரராக உருவெடுத்தார்?4. காசி சிவனே உருவாக்கிய நகரம் என்று தெரியுமா?5. செவ்வாய் சிவனுடைய வியர்வைத் துளியிலிருந்து பிறந்தது என்று தெரியுமா?6. இராவணனின் வெட்டப்பட்ட 9 தலைகளை சிவன் மீண்டும் ஓட்ட வைத்தது தெரியுமா?7. கும்பகர்ணனின் மகனை சிவபெருமான் ஏன் கொன்றார் தெரியுமா?...மேலும் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் இப்புத்தகம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.