Sri Ramanuja is one of the most important Acharyas who dedicated himself to Sri Vaishnavism. Born as an ordinary man and rising to become a great saint his life was full of many struggles and sacrifices. This book depicts those events and many rare incidents that occurred in his life journey.Sri Ramanuja was not only a traditional religious leader but also a great revolutionist in Sri Vaishnavism. He made the downtrodden enter the temple and made many changes happen. The author of this book J. Parthasarathy has written the life story of Sri Ramanuja in a very simple heart-warming and devotional style. The specialty of this book is that it is written in natural language without using much Vaishnava language and without completely deviating from it. | ஶ்ரீ வைணவ நெறிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஆச்சாரியர்களுள் முக்கியமானவர் ஸ்ரீ இராமானுஜர். சாதாரண மனிதராகப் பிறந்து பெரும் மகானாக உயர்ந்த இவரது வாழ்க்கை பல போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அந்த நிகழ்வுகளையும் அவரது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்களையும் காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.ஸ்ரீ இராமானுஜர் பாரம்பரிய சமயத் தலைவர் மட்டுமல்ல ஶ்ரீ வைஷ்ணவத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியவர். தாழ்த்தப்பட்டோரை திருக்குலத்தாராக்கி ஆலயப்பிரவேசம் செய்வித்து பல மாற்றங்கள் ஏற்பட வழி செய்தவர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி மிகவும் எளிமையான நடையில் மனதை உருக்கும் வகையில் பக்திப் பரவசத்தோடு ஶ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதி இருக்கிறார். வைஷ்ணப் பரிபாஷையை அதிகம் பயன்படுத்தாமலும் அதிலிருந்து முற்றிலும் விலகி அந்நியப்படாமலும் இயல்பான மொழியில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது அதன் சிறப்பு.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.