சந்தேகமேயில்லாமல் இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க அவர் பெயர் இன்று அத்துப்படி. அவருடைய ஆப்பிள் தயாரிப்புகள் பரவாத இடம் பூமியில் இல்லை. உலகப் புகழ்பெற்ற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றைக் கட்டியெழுப்பியவராக மட்டுமின்றி தனிப்பட்டமுறையில் அசாதாரணமான ஒரு வெற்றியாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று கொண்டாடப்படுகிறார். ஆப்பிள் என்னும் நிறுவனத்தின் பிறப்பும் வளர்ச்சியும் மட்டுமல்ல ஸ்டீவ் ஜாப்ஸின் பிறப்பும் வளர்ச்சியும்கூட திகைக்கவைக்கக்கூடியது. எந்தவொரு திரைப்படத்தையும் விஞ்சும் திருப்புமுனைகளைக் கொண்டது அவருடைய வாழ்க்கை. அதில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங் களும் மட்டுமல்ல சர்ச்சைகளும் சறுக்கல்களும்கூட கலந்திருக்கின்றன. வசதியான பின்னணியெல்லாம் இல்லை அவருக்கு. பெரும் படிப்பாளி என்றும் அவரை அழைக்கமுடியாது. நூறு சதவிகிதம் ஒழுக்கமான தூய்மையான மனிதர் என்றும் அவரைச் சொல்லிவிடமுடியாது. ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இளம் வயதிலேயே ஓர் பெரும் கனவு இருந்தது. அதைத் துரத்திச் செல்லும் துணிவும் இருந்தது. ஆப்பிள் என்னும் அதிசயம் சாத்தியமானதற்குக் காரணம் அதுதான். ஸ்டீவ் ஜாப்ஸின் பிரமிப்பூட்டும் வாழ்வையும் ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக் கதையையும் ஒன்றுசேர்த்து இந்தப் புத்தகத்தில் வழங்குகிறார் அப்பு. இப்படியொருவரால் நிஜமாகவே வாழமுடியுமா என்னும் திகைப்பையும் மயக்கத்தையும் இந்தப் புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தப்போவது உறுதி.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.