*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹217
₹299
27% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும் முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும் பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார். உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும் உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்: • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி