*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹110
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
‘உடலால் மறைந்தாலும் இறைநேசர்கள் நித்தியக் காலமும் ஜீவித்திருக்கிறார்கள். சிரியாவின் ராஜா ஒருவர் பின்னாளில் சீரிய ஞானியாகி நாட்டம்கொண்டவர்க்கு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர்தான் இறைநேசரான திருச்சி வாழ் தஃப்லே ஆலம் பாதுஷா. ஏழு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கிய மகானின் வியப்பூட்டும் வாழ்க்கையை அழகுற விவரிக்கிறது இந்நூல். இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்கள் பலரின் புருவங்களை உயர்த்தலாம். உதாரணமாக ராஜராஜ சோழனும் அவன் சகோதரி குந்தவையும் நத்ஹர் வலியின் வளர்ப்புப் பிள்ளைகள். தந்தையும் கணவனும் இறந்தபின்னர் இஸ்லாத்தில் இணைந்து ‘ஹலிமா’ என்ற பெயரோடு நத்ஹர் வலியின் மகளாக இறுதிவரை குந்தவை இருந்தார். குந்தவை மற்றும் அவரது வளர்ப்புக் கிளியின் அடக்க ஸ்தலங்கள் தர்காவுக்குள்ளேயே உள்ளன. ஞானப்பாட்டையில் பயணித்து மக்கள் பணி செய்து வாழ்ந்த அம்மகானின் மகத்தான தவ வாழ்வையும் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களையும் நாகூர் ரூமி சுவைபடக் கூறியிருக்கிறார். இந்திய சூஃபி வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரின் நூலகத்திலும் இடம் பெறவேண்டிய பொக்கிஷம் இந்த நூல்.