கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த மொழியாம் உலக மொழிகளுள் தாய்மொழியாம் நம் தமிழ்மொழியைப் பற்றி நாம் அறிந்திட்ட செய்திகள் கைம்மணவு என்றால் நாம் அறிந்திடாதது உலகளவு ஆகும். தமிழ்மொழியின் வரலாறு குறித்த நூல்கள் எண்ணற்றன கிடைக்கப்பெறுகின்றன. இந்நூல் தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழின் ஒப்பில்லாத தன்மையையும் எடுத்துக் கூறுகிறது. இதில் நீங்கள் வாசிக்கின்ற செய்திகள் முன்னதாக வாசித்ததாக இருக்கலாம்.வாசிக்காதது எண்ணற்றது உள்ளது.அன்றியும் தமிழ்மொழி தற்போது எவ்வாறு இருக்கிறது என்பதனைப் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இமயத்தின் உயரத்திற்கு நிகரான தமிழின் சிறப்பினை இந்த ஒரு புத்தகத்தினுள் அடைத்திட முடியாது. எனினும் இது தமிழை அறிந்திடச் செய்திடும் ஓர் சிறு படைப்பாக இருந்திடும் என எள்ளளவும் ஐயமில்லை.