*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹502
₹550
8% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார்.டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள். வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.***‘பெரும் மாற்றத்தைக் கண்ட ஒரு நிறுவனத்தின் கதை. பரவலாக வாசிக்கப்படவேண்டிய கதையும்கூட.’ - ரத்தன் டாடா‘மென்பொருள் வணிக நிறுவத்தின் அதி சுவாரசியமான வரலாறு. கட்டாயம் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.’ - ரஷ்மி பன்சல்‘இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆழமான விரிவான பார்வையை முன்வைக்கிறது இந்நூல்.’ - பிஸினஸ் ஸ்டேண்டர்ட்‘டிஜிட்டல் யுகத்தில் இந்தியா மேற்கொண்ட பயணத்தின் வரலாற்று ஆவணம்.’ - ஹிந்துஸ்தான் டைம்ஸ்‘உள் இருந்த ஒருவரின் விவரணை.’ - பிஸினஸ் வேர்ல்ட்