சாவி பத்திரிக்கையாளர் எழுத்தாளர் நிறைய எழுத்தாளர்களை உருவாக்கியவர். நகைச்சுவை ததும்ப எழுதுவதில் வல்லவர். இவர் தன்னுடன் ஶ்ரீ.வேணுகோபாலன் (இவர் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை) ராணி மைந்தன் இவர்களுடன் தாய்லாந்து பயணம் செய்கிறார். நம் அண்டை நாடான தாய்லாந்தின் வரலாறு பண்பாடு அங்குள்ள மக்களின் தொழில் பழக்க வழக்கங்கள் உணவு முறைகள் கோவில்கள் என அனைத்தைப் பற்றியும் அழகாக எழுதி உள்ளார். தாய்லாந்து எந்த காலணி ஆதிக்கத்திலும் இருந்ததே கிடையாது. அது தேவதைகளின் நாடு! சிங்கப்பூரின் அழகிய தூய்மையான விமான நிலையத்தில் இருந்து ஆரம்பமாகும் பயணம் மூன்று மணி நேரத்தில் பாங்காக் செல்கிறது. அதே மூன்று மணி நேரம் அங்குள்ள ஹோட்டலுக்கு செல்ல ஆகிறது! அவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்கிறார் அங்குள்ள சாவியின் நண்பர் ஹுமாயுன் தான் தங்குவதில் இருந்து எல்லா இடங்களையும் சுற்றிப் பார்ப்பது வரை அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து இருந்தார். பாங்காக் விண்ணை முட்டி நிற்கும் நீண்ட நெடிய கட்டிடங்கள் இடையிடையே கூர் கூரான முனைகளை உடைய புத்தர் ஆலயங்கள் தாய்லாந்து முழுதும் 27000 புத்தர் ஆலயங்கள்! இந்த கூர்மை எல்லாவற்றிலும் தொடர்கிறது. இளநீர்க்காய்கள் சீவப்பட்டு வெள்ளை வெளேரென்ன ஊசிமுனைக் கூர்மைகள் பெண்கள் தலையிலும் விரல்களிலும் கூர்மையான அணிகள் தாய்லாந்தின் அமைப்பே யானையின் துதிக்கை வடிவத்தில் கூர்மையாக உள்ளது!
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.