*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹335
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி?சுமாராக பணியாற்றுபவர்களை மேம்படுத்துவது எப்படி?ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி?வேறுபட்ட மனநிலையில் இருக்கும் ஊழியர்களை ஒரு புள்ளியில்ஒருங்கிணைப்பது எப்படி? வேலைக்கு ஏற்ற தகுதிகளைவளர்துக்கொள்வது எப்படி? ஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில்எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதைஎப்படிக் கண்டறிவது? ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனைவெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடுசேர்ந்து நாமும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும்.செயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல.உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும்மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமானதகவல்கள் அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டமுறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.உங்கள் மேன்மைக்கும் உங்களுடன் பணிபுரிபவர்களின் மேன்மைக்குமானபுத்தகம் இது.+திறமை இருக்கிறது. சாதிக்கவேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது. கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல் நேரம் மடடும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்துமுடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச்சமாளித்து எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக்கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு. படிப்பு தகுதி செல்வம் புகழ் திறமை உள்ளிட்ட பண்புகள் நபருக்கு நபர் மாறுபட்டாலும் காலம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான்.சோம. வள்ளியப்பன் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘காலம் உங்கள் காலடியில்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் இது. நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும் இந்நூல் மாணவர்கள் முதல் மேனேஜர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது.