சுவாமி சகஜானந்தர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் புலமைப்பெற்ற அறிஞராவார். தமிழக சட்டப் பேரவையிலும் பாராட்டத்தக்க பணியாற்றினார். 1926 ஆம் ஆண்டு சென்னை மகாண அரசின் மேலவை உறுப்பிணராக நியமிக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு வரை இப்பதவியிலும் பின்பு இவர் 1947 ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் இறக்கும் வரை (1959)தமிழக சட்டமன்ற உறுப்பிணராகவும் இருந்து அரும்பணியாற்றியத் தலைவராவார். அன்றைய காலகட்டத்தில் புகழ்பெற்று விளங்கிய பெரு மக்களான காந்தி நேரு அன்னிபெசண்ட் பாரதியார் வ.உ.சிஅன்னாமலை செட்டியர் முத்தையா செட்டியார் ராஜாஜி காமராஜர் கக்கன் இரட்டைமலை சீனிவாசன் எம்.சி.ராஜா சத்தியவாணி முத்து போன்றோர்கள் இவர் நடத்தியப் பள்ளிகளுக்குச் சென்று தங்களின் பாராட்டுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.