எதுவும் நிரந்தரமாக நம்முடன் தங்கியிருக்க முடியாத ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் உருவாக்கிக் வைத்துள்ள அதிதீவிர உற்பத்தித்திறன் கோலோச்சுகின்ற சுற்றுச்சூழல் காரணமாக நாமும் நம்முடைய வாழ்வில் இடம் பெற்றுள்ளவர்களும் ஒரு வேலை தேடியோ அல்லது பிற காரணங்களுக்காகவோ இடம் பெயர வேண்டியிருக்கிறது. அதனால் நாம் தனியாக விடப்படுகிறோம். ஆனால் இது உங்களுக்குத் தனிமையுணர்வை உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய சுயத்துடன் இருக்கிறீர்கள் அவ்வளவுதான். உங்களை உங்களுடைய தனிமைச் சிறையிலிருந்து விடுவித்து ஏகாந்தத்தை அனுபவிப்பது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுடைய உண்மையான வழிகாட்டி நீங்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ள இந்நூல் உங்களுக்கு உதவும். என்ன செய்யப்பட வேண்டும் என்பதை உங்கள் இதயம் அறியும். அதை எப்படிச் செய்வது என்பதை உங்கள் மனம் கண்டுபிடித்துக் கொள்ளும். இந்நூலைப் படித்தப் பின் நீங்கள் உங்களுடன் இருக்க ஏங்குவீர்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.