சிறை உங்கள் மனத்தில் இருக்கிறது! அதற்கான திறவுகோல் உங்கள் கையில் இருக்கிறது!! இறுதியில் நமக்கு என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல - அதைக் கொண்டு நாம் என்ன செய்யத் தீர்மானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். வருத்தம் இழப்பு பயம் கவலை தோல்வி மனச்சோர்வு போன்ற துன்பங்களை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம். ஆனால் கூடவே தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமும் நமக்கு இருக்கிறது. ஒன்று நாம் ஒரு துன்பத்தை எதிர்கொள்ளும்போது முற்றிலுமாக நம்பிக்கை இழந்து நம்முடைய முயற்சியைக் கைவிட்டுவிடலாம்; அல்லது ஒவ்வொரு கணமும் நமக்குக் கிடைத்துள்ள ஒரு பரிசு என்பதுபோல நாம் வாழலாம். நம்மைச் சிறைப்படுத்துகின்ற எண்ணங்களையும் நம்மை இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்ற அழிவுபூர்வமான நடத்தைகளையும் மாற்றுவதற்கு உதவக்கூடிய நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய ஒரு கையேட்டை பிரபல உளவியலாளரும் நாஜி வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்தவருமான ஈடித் எகர் நமக்கு வழங்குகிறார். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் தன்னிடம் சிகிச்சை பெற்றுள்ளவர்களுடைய வாழ்க்கையிலும் நடைபெற்றச் சம்பவங்களை அவர் இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். உங்கள் வாழ்க்கையின் மிக இருண்ட கணங்கள்தாம் உங்களுடைய மாபெரும் ஆசான்கள் என்பதை நீங்கள் கண்டு கொள்ளவும் உங்களுக்குள் இருக்கின்ற உள்ளார்ந்த வலிமையின் வாயிலாக சுதந்திரத்தை அடையவும் அவருடைய பாடங்கள் உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.