*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹253
₹350
28% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
உறவுகள் தொழில் சொத்து உடல்நலம் என பலவகையான தேவைகளுக்காக நாம் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும்போதும் பல நேரங்களில் நாம் வெறுமையையும் நமது உண்மையான சுயத்திலிருந்து விலகிவிட்ட உணர்வையும் அடைகிறோம். ஒரு கிரகம் பல சூரியன்களை சுற்றிவர முடியுமா? அதுபோன்று நம் வாழ்க்கையில் நமக்கு பல மையங்கள் இருப்பினும் ஒவ்வொரு இதயத்தின் நடுவிலும் இருக்கும் மிக ஆழமான அந்த உண்மையான மையம் எங்கே? ஒரு மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான ஆன்மீகத் தெளிவூட்டும் உரையாடல்களின் மூலம் தாஜி என பலராலும் அறியப்படும் திரு கம்லேஷ் ஞி. படேல் அவர்கள் ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறையின் கோட்பாடுகள் மற்றும் தத்துவத்தை ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறையை பயிற்சி செய்பவரும் பயிற்சி அளிப்பவருமான ஜோஷுவா போல்லாக்கிற்கு வெளிப்படுத்துகிறார். இப்புத்தகம் பிரார்த்தனை மற்றும் யோகப் பிராணாஹுதியின் சாராம்சத்தில் தொடங்கி நடைமுறை குறிப்புகளின் வாயிலாக தியானத்தை தெளிவுபடுத்துதல் வரை நம்மை சிந்திக்க வைக்கிறது. இது நமது புலன்களின் வரையறைகளைக் கடந்து வாழவும் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணையவும் வழிவகுக்கிறது. ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறையை பயிற்சி செய்வது என்பது தோற்றத்தைக் கடந்து சாராம்சத்தை நாடுவதாகும் சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் சத்தியத்தை நாடுவதாகும். இது நம்மை நமது இதயத்தின் ஆழத்தில் மையப்படுத்தி அங்கிருக்கும் உண்மையையும் நிறைவையும் கண்டறிய உதவும்.