இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு இறுதியில் பிடிக்கப்பட்டு ஒதுக்குப்புறமான இந்தியத் தீவு ஒன்றிலுள்ள உயர் பாதுகாப்பு வளாகம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்படுகின்ற மர்ம நபரான ஓம் சாஸ்திரி என்ற அகோரியை பிரித்திவி என்ற இருபத்தொரு வயது இளைஞன் தேடிக் கொண்டிருக்கிறான். உண்மையைக் கக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு மனோவசியத்திற்கு உட்படுத்தப்படுகின்ற ஓம் சாஸ்திரி இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு யுகங்களையும் தான் பார்த்துள்ளதாகவும் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் தான் பங்கெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார். இயற்கையையும் இறப்பையும் மீறியதாக இருந்த அவருடைய கடந்தகாலத்தைப் பற்றிய அவருடைய நம்புதற்கரிய கூற்று அனைவரையும் மலைக்க வைக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழ்ந்திருந்த பிற சிரஞ்சீவிகளை ஓம் சாஸ்திரி தேடிக் கொண்டிருப்பதை விசாரணைக் குழுவினர் அறிந்து கொள்கின்றனர். இந்த விநோத இரகசியங்களால் புராதனகாலம் குறித்த இன்றைய நம்பிக்கைகளைக் கடுமையாக அசைத்துப் பார்க்கவும் எதிர்காலப் போக்கைத் தடம்புரள வைக்கவும் முடியும். அப்படியானால் யார் இந்த ஓம் சாஸ்திரி? அவர் ஏன் பிடிக்கப்பட்டார்? பிரித்திவி ஏன் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறான்? ஓம் சாஸ்திரியின் இரகசியங்கள் பிரித்திவியின் தேடல்கள் இந்துத் தொன்மக் கதைகளைச் சேர்ந்த பிற சிரஞ்சீவிகளின் சாகசங்கள் ஆகியவை அடங்கிய இந்தப் பரபரப்பான பயணத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.