அவர்கள் காதலை மனதளவில் கொண்டாடினார்கள். அன்று மருத்துவமனையில் தமயந்திக்கு நடந்த நிகழ்வை கேட்டு மாறன் அதிர்ந்து போனான். பாரிஸ் நாட்டின் பயணத்தின் போது சிறிய ஈபிள் கோபுரத்தை வாங்கி கொண்டு ஒரு வருடம் கழித்து கப்பலில் இருந்து ஆசையாக தன் மனைவியை பார்க்க சென்ற ரவீந்தர் சர்மாவிற்கு விதி நடத்திய கோர விளையாட்டு வேறொருவருக்கும் நடக்க கூடாது. விதிதான் ஏன் இவ்வளவு பயங்கரமாக உள்ளது? அந்த ஆமையின் ஏக்கம் தீருமா? பள்ளி பருவத்தில் மாறன் வாழ்க்கையில் நிகழ்ந்த காதல் அதனால் அவனுள் ஏற்பட்ட மாற்றம் இறுதியில் வாழ்க்கை கற்றுக்கொடுத்த அனுபவம் என கதை நகர்கிறது. பேச்சியம்மாள் கூறிய கதைகளை கேட்டு வளர்ந்த மாறனுக்கு வெள்ளை கொக்குகள் அளித்த ஆசிர்வாதம் உணர்ச்சியின் உச்சம். அந்த கடற்கரையில் மட்டும் இருட்டி கொண்டு பெய்த மழையில் தமயந்தி மாறன்னின் வாழ்க்கை முழுவதுமாக நிறைந்து இருந்தாள். பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்த தமந்திக்கு மருத்துவமனையில் விதி போட்ட முடிச்சில் மாறன் மூச்சு தினறிப்போனான். மாறன் வாழ்வில் நடந்த சுவாரசியமான விஷயங்களையும் பந்த பாசங்களையும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.