*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹326
₹499
34% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஒரு நூலகம்! பல ஜென்மங்கள்! வாழ்க்கையும் மரணமும் கைகுலுக்கிக் கொள்கின்ற இடத்தில் ஒரு நூலகம் இருக்கிறது. இந்நூலின் கதாநாயகி நோரா அந்த நூலகத்திற்கு வந்து சேர்கின்றபோது தன் வாழ்க்கையின் சில விஷயங்களைச் சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு அவளுக்குக் கிட்டுகிறது. அக்கட்டம்வரை அவளுடைய வாழ்க்கை துன்பத்திலும் பின்வருத்தங்களிலும் தோய்ந்த ஒன்றாகவே இருந்து வந்திருந்தது. இதுவரை தான் தன்மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்ததோடு தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வந்திருந்ததையும் அவள் உணர்கிறாள். ஆனால் இப்போது எல்லாமே முற்றிலுமாக மாறவிருக்கின்றது. அவள் தன்னுடைய வாழ்க்கையை வேறு விதமாக வாழ்வதற்கான வாய்ப்பை அந்நூலகத்திலுள்ள நூல்கள் நோராவுக்கு வழங்குகின்றன. முன்பு அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவரின் உதவியுடன் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பின்வருத்தத்தையும் நீக்குவதும் தனக்கான ஒரு கச்சிதமான வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதும் இப்போது அவளுக்குச் சாத்தியமாகியுள்ளது. ஆனால் விஷயங்கள் எப்போதும் தான் கற்பனை செயது வந்துள்ளதைப்போல இருக்கவில்லை என்பதை அவள் உணர்கிறாள். விரைவில் அவளுடைய தேர்ந்தெடுப்புகள் அவளையும் அந்த நூலகத்தையும் பெரும் ஆபத்துக்குள் சிக்க வைக்கின்றன. காலம் கடப்பதற்குள் வாழ்க்கையின் இந்த உச்சகட்டக் கேள்விக்கான பதிலை அவள் வழங்கியாக வேண்டும்: வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கான வழி எது?