தேவயானியின் பள்ளி மூடப்பட்டுவிட்டது. காரணம் அந்தப் பள்ளி முன்பு ஏரியாக இருந்த இடத்தில் கட்டப்பட்டிருந்ததாம். அதைவிட மோசம் அவள் தன்னுடைய தந்தையின் மதிப்பு மிக்க கல் ஒன்றைத் தன் பள்ளி மேசையில் வைத்திருந்தாள். அவள் அதை மீட்டெடுப்பதற்குள் அவளுடைய தாய் டாக்டர் பிருந்தா ரத்னாகர் அவர்கள் குடும்பத்தை ஹம்பிக்கு அழைத்துச்செல்கிறார். நீர் வள வல்லுனரான டாக்டர் ரத்னாகரை முடக்கவேண்டும் என்று அங்கு யாரோ முயல்கிறார்கள். தேவயானியால் யாரையும் நம்பமுடியவில்லை. அதனால் தேவயானியும் அவளுடைய சகோதரன் சாரங்கும் அவர்களுடைய உறவினன் நகுலும் இந்த மர்மத்தை விடுவிக்க முயல்கிறார்கள். அந்த நேரத்தில் பல நூற்றாண்டுகளுக்குமுன் நடைபெற்ற ஒரு கதையும் அங்கு விரியத் தொடங்குகிறது. விஜயநகரப் பேரரசில் சுபா என்னும் இளம் பெண் தன்னுடைய தாத்தாவைப்போல் பெரிய தொட்டிப்பாலங்களை வடிவமைக்கவேண்டும் என்று கனவு காண்கிறாள். அப்போது ஒரு முக்கியமான அணைக்கட்டை அழிப்பதற்கான ஒரு திட்டத்தைப்பற்றி அவள் கேள்விப்படுகிறாள். அடுத்து என்ன செய்வது என்று திகைத்துப்போகிறாள் அவள். கடந்தகாலத்தையும் நிகழ் காலத்தையும் கலந்து பின்னி விரியும் 'காணாமல் போன ஹம்பிப் பாறைகள்' வரலாற்றிலிருந்து இன்றைய தீர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பரபரப்பான மர்மக் கதை. துப்பறியும் சிறுவர்கள் சரியான நேரத்தில் ஹம்பியின் ரகசியங்களை வெளிப்படுத்துவார்களா? சுபாவால் அணைக்கட்டைக் காப்பாற்ற இயலுமா? கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் பாலம் அமைக்கும் இந்தச் சிறப்பான துணிகரக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.