*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹377
₹499
24% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
பரந்து விரிந்த அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஐம்பத்தைந்து வயது பிந்த்தா ஜுபைரு -ஐந்து குழந்தைகளின் பாட்டி- கரப்பான் பூச்சிகளின் நெடி படர்ந்த அதிகாலையில் கண் விழித்தபோது தவிர்க்க இயலாத தீய சம்பவம் ஒன்று நிகழப் போகிறதென்று உணர்ந்தாள். இருபத்தைந்து வயது ஹஸன் ரெஸா போதைப் பொருள் விற்பனை செய்பவன் உள்ளூர் ரவுடிகளின் தலைவன் திருடும் பொருட்டு அவளது வீட்டின் வேலியைத் தாண்டிக் குதித்தபோது அவள் இதயத்தில் தடம் பதிக்கப் போகிறான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அசாதாரண சூழலில் சந்தித்துக்கொண்ட இருவரும் ரகசிய உறவின் பயணத்தில் திளைத்திருக்கையில் பிந்த்தாவின் செல்வச்செழிப்புடைய மகன் அதை அறிய நேரும்போது எதிர்பாராத வகையில் அவலமும் துயரமும் ஏற்படுகின்றன. பழமைவாதமும் கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம் ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது வயது வர்க்கம் மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.