அமிழ்தினும் இனிய செந்தமிழ் இலக்கியமாகிய திருமுருகாற்றுப்படை என்னும் தெய்விகநூல் தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளுள் ஒன்றாகிய பதினேராம் திருமுறையுள் மிளிரும் ஒரு பிரபந்தமாகும். இதனை அன்பர்கள் நியமத்துடன் பொருளுணர்ந்து ஓதி உய்யவேண்டும் என்று எண்ணி இச்சபையினர் 16.3.49 தொடங்கிப் பிரதி புதன் கிழமையிலும் மாலை 6 மணிக்கு உயர்திரு கி.வா. ஐகந்நாத ஐயர் அவர்களைக் கொண்டு இச்சபையின் ஆதவிரல் திருமுருகாற்றுப்படை வகுப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவ் வகுப்பில் கலந்துகொள்ளும் அன்பர்களுக்கும் ஏனேயோர்க்கும் பயன்படும்படி இவ்வரிய நூலுக்கு ஓர் உயரிய பொழிப்புரையை எழுதுவித்துக் குறைந்த விலையில் இச்சபையின் இரண்டாம் வெளியீடாக இதனை நம் தமிழ்ப் புதிய ஆண்டு சித்திரை மீ" 8உ நன்னாளில் வெளியிடுகின்றோம். இப் பொழிப்புரையை எங்கள் வேண்டுகோளுக் கிணங்கி எழுதி உதவிய திரு. கி. வா. ஜகந்நாத ஐயர் அவர்களுக்கும், இவ்வுரையைப் பதிப்பிக்குமாறு அநுமதி தந்து வெகு விரைவில் அழகுற அச்சிட்டு உதவிய மயிலாப்பூர் அல்லயன்ஸ் கம்பெனியாருக்கும் எங்கள் நன்றி உரியதாகுக. சைவம் வாழ்க! தமிழ் வாழ்க
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.