கட்டுரைகளைவிட மக்கள் கதைகளையே அதிகம் நாடிப் போவதற்குக் காரணம் கட்டுரைகள் புரியாமல் இருப்பதுதான். இந்த வருத்தத்தைத் தீர்க்க தன் கட்டுரைகளில் அதிகபட்ச எளிமையையும் அழகு உணர்ச்சியையும் ஸ்டைலையும் அறிமுகப்படத்தினார் சுஜாதா அந்த வரிசையில் இந்தத் தொகுப்பு முக்கியமானது.கம்ப்யூட்டர் நம்மை ஓவர் டேக் செய்யுமா? புதுமைப்பித்தனின் பாதிப்பு இல்லாமல் இன்று யாராவது எழுதுகிறார்களா? பெங்களூரின் இரவு நேர வாழ்க்கை எப்படியிருக்கும்? காதலை விஞ்ஞான ரீதியில் புரிந்துகொள்ளமுடியுமா? கன்னட சினிமாவுக்குத் தாயும் தாலியும் தேவைப்படுவது ஏன்? பெண் பெயரில் சுஜாதா எழுதவது ஏன்?‘விழுமியங்களும்’ ‘பரிமாணங்களும்’ ‘ஊடாடல்களும்’ கலக்காத அசல் சுஜாதா ஸ்டைல் கட்டுரைகள். அறிவியல் இலக்கியம் இலங்கை ரோபோடிக்ஸ் பெரியார் பூரணம் விஸ்வநாதன் எடியூரப்பா கம்பர் என்று பரந்து விரிகிறது இவர் உலகம்.துள்ளலான ஜாலி நடையில் ஒரு இன்டலக்சுவல் விருந்து!
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.