‘சுபா’ – புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். 1983இல் மாத இதழ் ஒன்றில் ‘வெள்ளி இரவு’ நாவலில் அறிமுகமானது ‘ஈகிள்ஸ் ஐ’ துப்பறியும் நிறுவனம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ராம்தாஸ் தலைமையில் நரேந்திரன் என்ற துடிப்பான சாகச இளைஞனும் அவனுக்குத் துணையாக ஜான்சுந்தர் என்ற இளைஞனும் மேலுமிருவரும் கொண்ட படை துப்பறிவதாக அமைக்கப்பட்ட நாவல்கள் மனதைக் கவ்வின. பின்னாளில் வைஜயந்தி நரேந்திரனுடன் வந்து இணைந்ததும் அனிதா ஜான்சுந்தருடன் இணைந்ததும் நிகழ சாகசங்களுடன் காதலும் குறும்பும் இணைந்ததாக சுபாவின் த்ரில்லர்கள் அமைந்தன. சுபா என்றாலே நரேன் வைஜ் கதையில் உண்டுதானே என்று வாசகர்கள் தேட ஆரம்பித்தனர். சிறுகதைகள் குறுநாவல்கள் தொடர்கள் நாவல்கள் திரைக்கதைகள் என்று சுபாவின் நீண்ட எழுத்துப் பயணத்தில் தேசியப்பற்று மிக்கக் ராணுவக் கதைகள் இளமை தெறிக்கும் காதல் கதைகள் மனதிற்கு நெருக்குமான குடும்பக் கதைகள் என அவர்கள் தொடாத புதின வகைள் இல்லை. Excerpts from Thuppaki Paarvai: கதவு மெல்ல நகர்ந்தது. பக்கவாட்டில் கம்பிகளில் இடிக்காமல் நுழையுமளவிற்குத் திறந்ததும் தன்னை அந்த இடைவெளி வழியே செலுத்தி வெளியே வந்தான். நீளமான காரிடாரில் அங்கங்கே மின் விளக்குகள் எரிந்து கொண்டி ருந்தன. காரிடரைக் குறுக்கில் கடந்ததும் சிறை மைதானம். மைதானத்தில் இருளை விரட்டும் பிரகாசமான வெள்ள விளக்குகள். சொல்லி வைத்தது போல் அத்தனை விளக்குகளும் திடீரென்று அணைந்தன. மின் தடங்கல். வேண்டுமென்றே செய்யப்பட்ட மின் தடங்கல். மறுபடியும் மின்சாரம் வருவதற்குள் ஜெனரேட்டர் இயங்குவதற்குள் அவன் தப்பித்தாக வேண்டும். நுனி விரல்களால் மைதானத்தின் முரட்டுப் புல்வெளியில் ஓடினான்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.