யாரும் வேண்டாம் எதுவும் வேவையில்லை என்று சொல்லி br>உலகை நிராகரித்த துறவிகள் முழுமுற்றாக எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கிவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு புதிய உலகைத்தான் அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இன்னொரு உலகைக் காண ஒரு நீண்ட நெடும் பயணத்தை நாம் மேற் கொண்டாகவேண்டும். பாட்ரிக் லெவி இந்தப் புத்தகத்தில் செய்திருப்பது அதைத்தான். அவர் காணும் துறவிகள் அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள். பாமரர்களாக இருக்கிறார்கள். தத்துவஞானிகளாக மிளிர்கிறார்கள். கண்முன்னால் அதிசயத்தை நிகழ்த்துகிறார்கள். கஞ்சா புகைக்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். கடவுளுடன் பேசுகிறார்கள். கடவுளே இல்லை என்றோ நானே கடவுள் என்றோகூட அறிவிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நம்மைப் போல் br>பிறந்து வளர்ந்து ஏதோ ஒரு கட்டத்தில் துறவைத் தழுவியவர்கள். எது அவர்களை மாற்றியது? அவர்கள் எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களுடைய தினசரி வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களிடம் உண்மையிலேயே அதிசய சி ஏதேனும் இருக்கிறாதா? நாவல் என்றாலும் இந்தப் புத்தகம் விவரிக்கும் br>பயணம் நிஜம். இதில் வரும் துறவிகள் நிஜமானவர்கள். அவர்களுடைய ஞானத் தேடல் நிஜம். அந்தத் தேடலைத்தான் அவர்கள் ஒரு தவமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அற்புதமான br>ஓர் ஆன்மிக அனுபவத்தையும் பரவசத்தையும் இனம் புரியாத ஒருவித திகைப்பையும் ஒருசேர ஏற்படுத்தும் இந்நாவலை ஒரு வகையான ஆழ்ந்த அகப் பயணமாகவும் பார்க்க இயலும்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.