தமிழில் படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம் தருவது தூது இலக்கியம் . சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை எவையெல்லாமோ தூது போனது. இந்தக் கதையும் தூது இலக்கியத்தைச் சேர்ந்தது தான். தபால் கொண்டு வரும் தபால்காரரையே தூதாக அனுப்பும் துணிவும் தைரியமும் காதலுக்கு மட்டுமே உண்டு என்பதைச் சுட்டிக்காட்டும் கதை. வே. காண்டீபன் அவர்கள் ஒரு கவிஞர் பாடலாசிரியர் மற்றும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் . வெட்கப்பூ என்ற காதல் கவிதை நூலுக்கும் புளியமரத்தில் என்ற மர்மக் கதைக்கும் நூலாசிரியர் . Pachyderm tales நடத்தியுள்ள கவியரங்கத்தில் கலந்து கொண்டு கவிதைகள் பல வாசித்துள்ளார். மண் மனம் மாறாமல் காதலைச் சொல்வதில் வல்லவர். தமிழ்த் திரைப்பாக் கூடத்தின் மாணவராயிருந்து பல ஆல்பங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் அடுத்த படைப்புகளாக வீதியெங்கும் கவிதைகள் மற்றும் மாமரி காவியம் அச்சில் ஏற தயாராக உள்ளது.