''ட்ரங்க் பெட்டி'' - இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திராத ஒரு விஷயம். சென்ற தலைமுறை வரை புழக்கத்தில் இருந்த ஒன்று இந்த ட்ரங்க் பெட்டி. அனேகமாக எல்லோருடைய வீடுகளிலும் பரணில் ஒன்றிரண்டு இருக்கும். பெரிய சைஸ்களில் கனமான இரும்பில் செய்யப்பட்ட இவைகள் இன்று வழக்கொழிந்து வரும் விஷயங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டன. உள்ளே பார்த்தால் வெள்ளிப் பாத்திரங்கள் பொம்மைகள் பழைய டைரிகள் அந்தக் காலத்துக் காசுகள் வீட்டு விசேஷங்களில் எடுத்த புகைப்பட ஆல்பம் என்று பலவும் அடைத்து திணிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை திறக்கையிலும் நாம் மறந்துபோன ஏதாவது விஷயமொன்று நம்மை ஆச்சர்யப்படுத்த தரிசனம் தந்து கொண்டேயிருக்கும். வாருங்கள்! இந்த ட்ரங்க் பெட்டி தன்னுள்ளே நமக்காக என்னென்ன ஆச்சர்யங்கள் வைத்திருக்கின்றன என தெரிந்து கொள்ளலாம்.