மிகவும் உயர்தரமான திகில் நாவல். ‘ நள்ளிரவு. நடுநடுவே வானத்தில் பளீர் பளீர் என்ற மின்னல்...’ என்ற முதல் வரியைப் படிக்க ஆரம்பித்த உடனே புத்தகத்தை கீழே வைக்க மனம் வராது. சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற விறுவிறுப்பான நடையில் எழுதியிருப்பார் ஜாவர் சீதாராமன். ஹிப்னாடிஸம் ஒத்த அலைவரிசை வசியப்படுத்துதல் இறந்தவரின் ஆன்மா கூடுவிட்டு கூடு பாய்வது போன்றவற்றை சாதாரண வாசகனுக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார். நம்மை திகிலூட்டுவதைவிட அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆவலைத் தூண்டும். இன்று பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து அவற்றின் உதவியால் காட்ட வேண்டியவற்றை தன் எழுத்து மூலம் காட்டியிருக்கிறார் ஜாவர் சீதாராமன்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
*COD & Shipping Charges may apply on certain items.