Ulaga Cinema 2
Tamil

About The Book

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதுவே இந்த முயற்சிக்கான மூலகாரணம். இந்த கட்டுரைகள் அத்தனையையும் ஒருவர் படித்து விட்டாரென்றால் நிச்சயம் உலகத்தை மயில் வாகனம் இல்லாமலேயே சுற்றி வந்து விட்ட உணர்வை ஏய்துவார் என்பது திண்ணம். அத்தனை சுவாரஸ்யங்கள் இதற்குள் பொதிந்து இருக்கின்றன. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கப்பலில் விமானத்தில் உலக நாடுகளுக்கு போய் பணம் ஈட்டுவது மட்டுமல்ல கப்பலோ விமானமோ ஏறாமலே இருந்த இடத்திலிருந்தே கொஞ்சம் நேசிப்போடு உலக சினிமாவை தேடினால் திரை மகள் நம்மை தேடி வருவாள். புதுச்செல்வம் தருவாள். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. கலைமகள் தருகிற அறிவுச் செல்வமும் செல்வம் தான். அதை திரைகடல் தாண்டி இருக்கிற அத்தனை உலக நாடுகளின் திரைக்காவியங்களை இந்த உலக சினிமா புத்தகங்களின் வாயிலாக தரிசிக்க இருக்கிறீர்கள். அந்த அனுபவம் நம்மை திரும்ப திரும்ப அதை நினைத்து பரவசிப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது.இப்போ உதயநிதி ஸ்டாலினை வச்சி ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். திரைக்கலைஞரும் நண்பருமான குலசேகருகு ரொம்ப நாள் வரை என்னை தெரியாது. ஆனா அவரை எனக்கு 25 வருசமா தெரியும். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் ஒருத்தரை ஒருத்தர் பாக்காமலே வச்சிருந்த நட்பு மாதிரி அவர் மேல எனக்கு நட்பையும் தாண்டிய ஆதர்ஸம் உண்டு. அப்புறம் படச்சுருள் அயல் சினிமா நிழல் மாதிரியான திரை இதழ்கள்ல கட்டுரைகள் எழுதும் போது படிச்சிருக்கேன். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அப்பிடி அவரு ஏழெட்டு வருசமா எழுதின முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கிய உலகின் சிறந்த திரைப்படங்கள் ஆவணப்படங்கள் குறும்படங்கள் பத்தின கட்டுரைகள் தான் தொகுக்கப்பட்டு இப்போ உலக சினிமா அப்படீன்ற புத்தகமா வெளிவந்திருக்கு. எழுத்துலயும் இயக்கத்திலயும் அவரு நிறைய வெற்றிகளை குவிக்கணும். வாழ்த்துகள் குலசேகர்- இயக்குநர் மு. மாறன்
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE