யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அதுவே இந்த முயற்சிக்கான மூலகாரணம். இந்த கட்டுரைகள் அத்தனையையும் ஒருவர் படித்து விட்டாரென்றால் நிச்சயம் உலகத்தை மயில் வாகனம் இல்லாமலேயே சுற்றி வந்து விட்ட உணர்வை ஏய்துவார் என்பது திண்ணம். அத்தனை சுவாரஸ்யங்கள் இதற்குள் பொதிந்து இருக்கின்றன. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கப்பலில் விமானத்தில் உலக நாடுகளுக்கு போய் பணம் ஈட்டுவது மட்டுமல்ல கப்பலோ விமானமோ ஏறாமலே இருந்த இடத்திலிருந்தே கொஞ்சம் நேசிப்போடு உலக சினிமாவை தேடினால் திரை மகள் நம்மை தேடி வருவாள். புதுச்செல்வம் தருவாள். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. கலைமகள் தருகிற அறிவுச் செல்வமும் செல்வம் தான். அதை திரைகடல் தாண்டி இருக்கிற அத்தனை உலக நாடுகளின் திரைக்காவியங்களை இந்த உலக சினிமா புத்தகங்களின் வாயிலாக தரிசிக்க இருக்கிறீர்கள். அந்த அனுபவம் நம்மை திரும்ப திரும்ப அதை நினைத்து பரவசிப்பில் ஆழ்த்தக்கூடிய வல்லமை கொண்டது. RECOMMEDATION: இந்த புத்தகத்தை படிக்கிற ஒவ்வொருத்தரும் உலக தரமான திரைப்படைப்புகள் பத்தி நிறையவே தெரிஞ்சுக்கலாம். அது மூலமா தமிழ்லயும் உலகத்தரமான சினிமாவை கொறஞ்ச மூலதனத்திலயே எடுக்க முடியும். அவரோட எழுத்தை பத்தி சொல்றதுனா இப்போ அவரை தமிழ் இலக்கிய உலகமும் திரையுலகமும் தூக்கி வச்சி கொண்டாடிட்டு இருந்திருக்கணும். அவர் எதை எழுதுனாலும் பிரமாதமா எழுதறாரு. உலக சினிமாவுலயும் உலக இலக்கியத்திலயும் அவருக்கு ஆழ்ந்த தேடல் இருக்கு.- இயக்குநர் எம். ஆர் பாரதி