வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன் SMS ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தைகள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் போதிக்கிறார்கள்.பிறருக்கு ஆர்வம் ஏற்படும்படி பேசுவது எப்படி? தர்மசங்கடமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது? மேடையில் எப்படிப் பேசுவது? குடும்பத்தினரிடம்? மேலாளரி டம்? தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? அவற்றை எப்படிக்களைவது? அத்தனைக் கேள்விகளுக்கும் இந்நூலில் விடை உண்டு.எந்த நேரத்தில் எதை எப்படிப் பேச வேண்டும் என்பதை சுவாரசியமாகக் கற்றுக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.+ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை. எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு.வேறு வழியே இல்லை. ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மரமோ அதன் கிளைகளோ அல்ல. உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.