*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹345
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்களின் உள்ளம் கவர்ந்தது இந்த 'உள்ளம் துறந்தவன்.' இன்சாஃப் என்கிற மகா பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சரி ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள். இன்சாஃபின் பெரும்பாலான ஷேர்கள் அவள் பெயரில் உள்ளன. ராகவேந்தர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் ராகவேந்தரின் உறவுகள் அவரது கம்பெனியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் மஞ்சரி நிறையவே இழப்புகளைச் சந்திக்கிறாள். போராடுகிறாள். வீழ்த்துகிறாள்.+குமுதத்தில் 2000-ல் பிரசுரமான கதை. இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செக்யூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி அருள் வாக்கு சொல்ல தன் பழைய நண்பனின் தங்கையை அதே ரயிலில் காண்கிறான். பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேற கதையின் தலைப்பே சொல்வது போல ஒரு ரயிலில் ஒரு ராத்திரியில் நடந்து முடியும் கதை.