*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹189
₹220
14% OFF
Paperback
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
கௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துச் சிரிக்கிறோம். இதில் இருந்து என்ன புரிகிறது? யாருக்காவது துன்பம் வரும் வேளையில் நாம் அவசியம் சிரிக்கிறோம். இந்தப் புத்தகத்தில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் எனக்குத் துன்பம் வந்த வேளைகளைச் சுட்டிக் காட்டுபவை. வேறு வழியே இல்லாமல் நீங்கள் சிரிக்கத்தான் செய்வீர்கள். எழுதுகிற அனைத்திலும் பாடுபொருளாக நாமே இருந்துவிடுவது ஒரு சௌகரியம். என்னைவிட என்னை நன்கு அறிந்தவர்களோ என்னைக் காட்டிலும் என்னை எள்ளி நகையாடக்கூடியவர்களோ யாரும் இருக்க முடியாது அல்லவா? உலகமானது ப்ரொக்ரஸிவ் லென்ஸ் அணிந்த எனது கண்களின் வழியேதான் தெளிவாகத் தெரிகிறது. நல்லது. நீங்கள் இனி சிரிக்கத் தொடங்கலாம். -பா. ராகவன்