*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
₹305
All inclusive*
Qty:
1
About The Book
Description
Author
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். அதற்கு முதலில் தேவை கமிட்மெண்ட். எடுத்துக்கொண்ட வேலையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்கும்வரை ஓயமாட்டேன் என்னும் கர்மசிரத்தை. எந்த சஞ்சலத்துக்கும் சலசலப்புக்கும் இடம் கொடுக்காத மனக்கட்டுப்பாடு.வேறு வழியே இல்லை. ஒரு தவமாக எடுத்துக்கொண்டு செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இலக்கை நிர்ணயித்துக்கொண்டால் மட்டுமே வெற்றி கிடைத்துவிடாது. மனத்தை ஒருமுகப்படுத்திக்கொண்டு அதை நோக்கி நாம் பயணம் செய்தாகவேண்டும். அர்ஜுனனின் கண்களுக்குப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது. மரமோ அதன் கிளைகளோ அல்ல. உறுதி மட்டுமே வேண்டும். செய்துமுடிப்பேன் என்னும் மனஉறுதி. அந்த உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். +செய்வதையே செய்துகொண்டிருந்தால் இதுவரை கிடைத்ததே இனியும் கிடைக்கும். நீங்கள் மாறவேண்டுமானால் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். மறுத்தால் மாற்றம் உங்கள் மீது திணிக்கப்படும்.அதற்காக தொட்டதற்கெல்லாம் மாறிக்கொண்டிருக்க முடியாது. மாறவேமாட்டேன் என்று விடாப்பிடியாகப் பிடிவாதம் பிடிக்கவும் முடியாது. எனில் எப்போதெல்லாம் மாறவேண்டும் எப்போதெல்லாம் மாறக்கூடாது? இதுதான் பிரச்னை இல்லையா? பிரச்னையைப் பிரச்னையாகப் பார்க்க மட்டுமே நாம் பழகிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையை மட்டும் உங்கள் நெருக்கமான ஃப்ரெண்டாக மாற்றிக் கொள்ள முடிந்தால்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது சாத்தியமா? சாத்தியம். நிச்சயம் சாத்தியம்.சின்னச் சின்ன சுவாரசியமான கதைகள் நடைமுறைச் சம்பவங்கள் என்று மாற்றங் களை எதிர்கொள்ளும் மந்திர வித்தையை மனத்தில் பதிய வைக்கும் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மாற்றங்களை நாமே தேர்ந்தெடுக்கலாம். நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.