Utharayanam
Undetermined Language

About The Book

மாஸு நினைவிருக்கிறதா? நாம் சந்தித்த புதுசு. எனக்கு ராயப்பேட்டையில் ஜாகை. நீங்கள் டவுன். இரவு எட்டுமணி வாக்கில் வருவீர்கள் - நீங்கள் தாத்து செல்லம் ரங்கநாதன். எல்லோரும் பேசிக்கொண்டே மரீனா வழியே நடந்து தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன் - பூரி பாஜி; சேறாட்டம் பால் அதன்மேல் கணிசமாக மிதக்கும் ஏடு. அப்படியே பேசிக் கொண்டே கோவிந்தப்ப நாய்க்கன் தெரு: விளக்கு வெளிச்சத்தில் இரவு பகலாகியிருக்கும். மார்வாரிப் பெண்டிர் வளையல்களும் பாதங்களில் தண்டையும் கொலுசும் குலுங்க விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல தெருவில் கும்மியடிக்கையில் - இது சௌகார்பேட்டையா பிருந்தாவனமா? அப்படியே பேசிக்கொண்டே கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி காந்தி - இர்வின் சாலை வழியே பேசிக் கொண்டே மீண்டும் மரீனா பீச்; நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. பேசிக்கொண்டே பைக்ராப்ட்ஸ் ரோடு விவேகானந்தர் இல்லம் ஐஸ்ஹவுஸ் ரோடு பெஸண்ட் ரோடில் என் வீட்டில் என்னை விட்டுவிட்டு மணி இரண்டாகிவிடும். பிரியாவிடையில் டவுனுக்குத் திரும்புவீர்கள். நம் அத்தனை பேருக்கும் அதென்ன பைத்யக்காரத்தனமோ?
Piracy-free
Piracy-free
Assured Quality
Assured Quality
Secure Transactions
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.
Review final details at checkout.
downArrow

Details


LOOKING TO PLACE A BULK ORDER?CLICK HERE