அன்பார்ந்த வாசகர்களே… எனது படைப்பான என் சிறந்த எழுதியின் துணை கொண்டு வல்லமையான சொற்களை வாழ்வியல் ஏற்றார்போல் வடிவமைத்துள்ள என் உவன் எனும் நூல் ஒவ்வொரு நரனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை கடந்து செல்லும் பாதைகளின் இயல்புகளை வழிப்பாதை மைல் கல்லாக தாங்களுக்கு வழங்கியுள்ளேன். சற்று இழைப்பாறி தமிழ் அர்த்தங்களை உள்வாங்கி தங்கள் வாழ்விலும் இதை பயன்படுத்தி மேன்மை பெற வேண்டுகிறேன்... இந்நூல் உலகில் ஆர்ப்பரிக்கும் தேடல் விவரங்களை உள்ளடக்கியது மேலும் அன்றாட வாழ்வில் மாந்தர்களின் இயல்பு நிலையை தெளிவாக விளக்கும் வகையில் புனையப்பட்டுள்ளது இந்நூல்... எனது கவிதைகள் படித்து ருசிப்போர்க்கு விருந்தாக சூடிக்கொள்வோர்க்கு மணம் மிகுந்த தமிழ்மாலையாக அமையும் என்ற நம்புகிறேன்.. கைத்தொட்டு படித்து இன்புறுங்கள்... நன்றிகளுடன் கவிஞர் கார்கவி நாகப்பட்டினம்