‘சுபா’ - சுரேஷ் புதினம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்து வைத்திருக்கும் பெயர். சிறுகதைகள் குறுநாவல்கள் தொடர்கள் நாவல்கள் திரைக்கதைகள் என்று சுபாவின் எழுத்துப் பயணத்தில் அனைத்துப் படைப்புகளும் அருமையானவை. மூன்று பேரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வருகிறான் ஜெயந்தன் என்கிற இளைஞன். அவன் செய்யும் முதல் கொலையிலிருந்துதான் துவங்குகிறது இந்தப் புத்தகத்தின் முதல் பரபர நாவல். அடுத்த இரண்டு எதிரிகளும் இப்போது சுதாரித்துவிட ‘வா மோதலாம்’ என்று அறைகூவல் விட கொலையுண்ட முதல் ஆசாமியின் தந்தை ஈகிள்ஸ் ஐயின் உதவியை நாட நரேன் வைஜ் கதையில் நுழைய படிக்கும் வாசகனின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்கிற மும்முனைப் போராட்டம் துவங்குகிறது. அவன் வந்த நோக்கத்தில் வென்றானா? இல்லை எதிரிகள் வென்றார்களா? நரேந்திரன் என்ன செய்தான்? அத்தனை கேள்விகளுக்கும் பரபரவென்று உங்கள் விரல்களால் புரட்டப்படப் போகும் பக்கங்களில் விடை இருக்கிறது. புரட்டுங்கள். இரண்டாவது நாவல் ‘துப்பாக்கி கலாசாரம்’ ஒரு ஆழமான சதியை விவரிக்கும் எதிர்பாராத திடுக் முடிவுடன் கூடிய விறுவிறு நாவல். நாயகனுக்கு ஒரு பெண்ணின் மீது எழுகிற ஈர்ப்பும் அதனால் வருகிற காதலும் அவனை வலையில் சிக்க வைக்கிறது. காதலிப்பதில் என்ன தவறு இருந்துவிடப் போகிறது? இருக்கும் - அவள் அடுத்தவன் மனைவி என்கிற பட்சத்தில். நாயகனின் பார்வையில் அழகான வர்ணனைகளுடன் விரியும் இந்த நாவல் மெதுவாகப் பயணித்து பின் சூடுபிடித்து வேகமாகி பின் எக்ஸ்பிரஸ்ஸாய் மாறி எதிர்பாராத திடுக் முடிவுடன் அமைந்திருப்பது படிக்க வெகு சுவாரஸ்யம். சுவாரஸ்யத்தை அனுபவியுங்கள். சுபாவின் புதின வரிசைகளில் இது பதின்மூன்றாம் புத்தகம்.
Piracy-free
Assured Quality
Secure Transactions
Delivery Options
Please enter pincode to check delivery time.
*COD & Shipping Charges may apply on certain items.